F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் சிக்கல் உள்ளது

10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் சிக்கல் உள்ளது
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பதினோராம் வகுப்புகாண விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்கள் காலாண்டு அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வருகை பதிவேடு இவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும்   ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களின் வருகை பதிவேடு காலாண்டு அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை அனுப்பும்படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. விடைத்தாள்கள் இல்லாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதற்கான விதிமுறைகள் வெளியிடப்படாததால் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதிலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் சிக்கல் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கிடையே விடைத்தாள்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டதை தங்களுக்கு சாதகமாக  பயன்படுத்திக்கொண்டு சில தனியார் பள்ளிகள் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அவசர அவசரமாக மீண்டும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் எழுத வைத்து விருப்பம் போல மதிப்பெண்களை வழங்கி விடைத்தாள்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே 10 மற்றும் 11 ஆம் வகுப்பு காலாண்டு அரையாண்டு தேர்வு விடைத்தாள் சேகரிப்பு மற்றும் அவற்றை ஒப்படைக்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது என்று தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது...






ST