F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை கடத்திய கேரளா அரசு துறை பெண் அதிகாரி!

கேரளாவின் அரசுத் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த பெண் ஒருவர் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கேரள தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக இருந்த சொப்னா வெளிநாட்டில் இருந்து தங்கத்தை 30 கிலோ கடத்தி வந்துள்ளார்.கேரள மக்களுக்கு ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து நிவாரணம் தருவதாக கூறி முதலமைச்சர் அலுவலகம் பெயரிலேயே இதுவரை இவர் மொத்தமாக 500 கிலோ அளவிற்கு தங்கத்தை கடத்தி வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சொப்னா கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் என்பதால் விமான நிலையத்தில் இவரிடம் பெரிதாக சோதனை நடத்தப்படவில்லை என தெரிகிறது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சொன்னா கடத்தல் சாம்ராஜ்யம் நடத்தி வந்திருக்கிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில் முதலமைச்சர் அவரை செயலாளர் பணிகளையும் என் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன‌. முதலமைச்சர் பினாரயி விஜய்யோடு இவ்வாறு நேரடித் தொடர்பில் இருந்த தங்க கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என விமர்சனங்கள் எழுதத் தொடங்கி உள்ளன. எனவே பாரபட்சமற்ற விசாரணையினை மத்திய அரசு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன. இதற்கிடையே சொப்னா தலைமறைவாக உள்ள நிலையில்  சொப்னா அவரது வீட்டில் அதிகாரிகள் 6 மணி நேரம் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை யும் லேப்டாப் செல்போன் உள்ளிட்ட வற்றையும் பறிமுதல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் சொப்னாவை கண்டுபிடிக்க சிபிஐயின் உதவியும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. விஜயனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தனக்கும் இந்த கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்..


இத்துடன் இந்த செய்தி முடிவடைகிறது மீண்டும் தெரிந்துகொள்ள நம்ம தமிழ் போஸ்டர் வலைத்தள பக்கத்தை பாலோ பண்ணிக் கொள்ளுங்கள்

ST