F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில அரசுகளைப் போல் தமிழக அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில அரசுகளைப் போல் தமிழக அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில அரசுகளைப் போல் தமிழக அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,


நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் பங்கேற்ற ஆன்லைன் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் மற்றும் மேற்கு வங்கம், மராட்டியம் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாட பஞ்சாப்,ராஜஸ்தான்,சட்டீஸ்கர்,புதுச்சேரி,மேற்கு வங்காளம், ஜார்கண்ட், மராட்டியம் உள்ளிட்ட 7 மாநிலஅரசுகள் முடிவு செய்துள்ளன.


இந்த நிலையில் நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில அரசுகளைப் போல் தமிழக அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-


நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். என்றும் அதற்கான முயற்சியை எடுத்த அன்னை சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவி்ததுக் கொள்கிறேன். மேலும் நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்.


இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ST