F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

உலக செய்திகள்கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற இரண்டு அமெரிக்க உளவு விமானம் - தடுத்து நிறுத்திய ரஷ்ய போர் விமானம்



உலக செய்திகள்கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற இரண்டு அமெரிக்க உளவு விமானம் - தடுத்து நிறுத்திய ரஷ்ய போர் விமானம்

கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற இரண்டு அமெரிக்க உளவு விமானங்களை ரஷ்ய போர் விமானம் தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

மாஸ்கோ,

கிழக்கு ஐரோப்பா அருகே கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற அமெரிக்க விமானப்படையின் இரண்டு உளவு விமானங்களை ரஷ்ய போர் விமானம் தடுத்து நிறுத்தி உள்ளது.


இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அமெரிக்காவின் ஆர்.சி 135 விமானம் மற்றும் பி- 8 போஸிடான் (Poseidon) போர் விமானம் ஆகியவை அத்துமீறி நுழைந்தன. அவற்றை வழிமறித்த தங்கள் நாட்டின் போர் விமானம் கருங்கடலில் இருந்து பாதுகாப்பான தூரத்திற்கு அழைத்து சென்றது” என்று அதில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு பார்க்கவும்

ST