F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

கொரோனா குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்


கொரோனா குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு https://bit.ly/2Q7JnDe

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தற்போதைய நடைமுறை தொடரும் என்றும் அதில் மாற்று வழிக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார்.

ST