F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுரை


சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுரை


-பாஸ் எளிமை ஆக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தினமும் www.allinknow.com

என்ற இனைய தலத்தை பார்க்கவும்
https://bit.ly/2Q7JnDe

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்த்திற்கு செல்ல இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சரியான காரணம் இருந்தால் மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டது.


இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் எனத் கூறி இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினத்தில் இருந்து இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டது. இ-பாஸ் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.


இதனால் சென்னையில் இருந்து சென்றவர்கள் மீண்டும் வேலைக்காக சென்னை வரத்தொடங்கியுள்ளனர். முதல்நாளிலேயே ஏராளமானோர் சென்னை வந்தடைந்தனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அப்படி வந்தால் மீண்டும் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.


இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது

ST