கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு


கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரி தேர்வுகளை ரத்து செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் யூ.ஜி.சி. கல்லூரி இறுதித் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதில் பிடிவாதமாக உள்ளது.


இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து எனவும், தேர்வு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி மதிப்பெண் வழங்கப்படும் எனவும், உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

Comments