F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

covide 19 Report ஒரு கோடியே 77 லட்சத்து 977 பேர் மீண்டனர்

ஒரு கோடியே 77 லட்சத்து 977 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 31 ம் தேதி ) காலை: 06:40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 53 லட்சத்து 77 ஆயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 77 லட்சத்து 977 பேர் மீண்டுள்ளனர்.


6:01 AM IST

ஒரு கோடியே 77 லட்சத்து 828 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 31 ம் தேதி ) காலை: 06:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 53 லட்சத்து 77 ஆயிரத்து 704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 77 லட்சத்து 828 பேர் மீண்டுள்ளனர்.


5:33 AM IST

கர்நாடகா: 7,101 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர்

கர்நாடகாவில் ஒரே நாளில் 7,110 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,42,229 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் மாநில அளவில் 72.1 சதவீதமாக உள்ளது.



4:31 AM IST

மஹா.,வில் புதிதாக 7,690 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

மஹா.,வில் ஒரே நாளில் 7,690 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.62 லட்சமாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 16,408 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 7,80,689 ஆக அதிகரித்தது.புதிதாக 296 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 24,399 ஆக உயர்ந்தது. ஒரே நாளில், புதிதாக 7,690 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டு, வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,62,401 ஆக உயர்ந்தது. 1,93,548 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் புனேயில் மட்டும் 51,909 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


3:45 AM IST

கேரளாவில் ஒரே நாளில் 1,766 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கேரளாவில் ஒரே நாளில் மேலும் 1,766 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49,849 ஆக அதிகரித்துள்ளது. மாநில அளவில் கொரோனா மீட்பு விகிதம் 67.47 சதவீதமாக உயர்ந்துள்ளது.


2:28 AM IST

கொரோனா தொற்று 2ம் முறை தாக்க வாய்ப்பில்லை

ஏற்கனவே கொரோனா பாதித்த நபருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதாக செய்தி வெளியான நிலையில், அது கடந்த கால தொற்றின் இறந்த வைரஸ்களால் வரும் முடிவுகள் என்றும், அதை நினைத்து அச்சம் தேவையில்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


1:30 AM IST

டில்லியில் 1,54,171 பேர் கொரோனாவில் இருந்து மீட்பு

டில்லியில் கொரோனா தொற்றில் இருந்து 1,54,171 பேர் குணமடைந்ததாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டில்லியில் தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,54,171 ஆக உயர்ந்தது. தற்போது 14,793 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 6,881 RTPCR/CBNAAT/ TrueNat சோதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 13,555 விரைவான ஆன்டிஜென் சோதனைகளும் நடத்தப்பட்டன. இதுவரை நடத்தப்பட்ட மொத்த சோதனைகள் 15,69,096 ஆக உள்ளன. டில்லியில் தற்போது 820 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.


1:01 AM IST

கொரோனா திடீர் இறப்புகளை தடுக்கும் 'LMWH' மருந்து

கொரோனாவால் ஏற்படக்கூடிய திடீர் இறப்புகளை 'LMWH' மருந்து தடுக்கும் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனாவால் உலகின் பலநாடுகளில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கொரோனாவால் ஏற்படும் உயரிழப்பை 'LMWH' மருந்தினால் தடுக்க முடியும் என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் 90 சதவீத உயிரிழப்பை தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


12:32 AM IST

பீஹாரில் கொரோனா மீட்பு விகிதம் 86.88 சதவீதமாக உயர்வு

பீஹாரில் கொரோனாவில் இருந்து புதிதாக 2,231 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் கொரோனா மீட்பு விகிதம் 86.88 சதவீதமாக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.


12:05 AM IST

கொரோனாவிலிருந்து மீண்டார் கேரளாவின் 110 வயது பாட்டி

கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 110 வயது பாட்டி முற்றிலுமாக குணமடைந்துள்ளார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரந்தாதனி வரியத் பத்து (110) என்பவர் கடந்த 18 ம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வயது அதிகம் என்றாலும் அவருக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டுள்ளன. இவர் எந்தவித பதற்றமும் இன்றி சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதனிடையே கேரள மாநிலத்திலேயே கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்த மிக வயதான நபர் வரியத் பத்து பாட்டி தான் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாதெரிவித்துள்ளார். மாநில சுகாதார அமைச்சர் பாட்டிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டினை தெரிவித்தார். பாட்டியை கொரோனா தொற்றிலிருந்து காப்பாறறிய மருத்துவர்களுக்கு பாட்டி குடும்பத்தினர் பாரட்டு

ST