F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

நாள் ஒன்றுக்கு ரூ. 1,800 மாதம் ரூ. 54,000 வருவாய்!- லைக் , ஷேர் ஆசையை தூண்டி கோடிக்கணக்கில் மோசடி


பேஸ்புக் மற்றும் யூடியுபில் லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்தால் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி மக்களிடத்தில் கோடிக்கணக்கில் மோசடி செய்த செயலிகள் மீது சென்னை சைபர் காவல்நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன.

பேஸ்புக் மற்றும் யுடியூப்பில் வீடியோ பார்வையிடுவதற்கு ஏற்பட அந்த நிறுவனங்கள் பணம் வழங்குகின்றன. பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களின் நடுவே விளம்பரங்கள் வெளியானால் கூடுதலாக சம்பந்தப்பட்ட யுடியூப் சேனலுக்கு அதிக வருவாய் கிடைக்கும். ஆனால், மக்கள் அவ்வளவு எளிதாக வீடியோவுக்கு லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்து விட மாட்டார்கள். மக்களை லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்தால் காசு தருவதாக பல ஆப்புகள் வலம் வருவதை காண முடியும். அந்த செயலிகளின் பெயர் மீ சேர்(me share) மற்றும் லைக் சேர் (like share) என்பதாகும் .இந்த செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யமுடியாது. தனியாக லிங்குகள் மூலமாகதான் பதிவிறக்கம் செய்யமுடியும்.

மீ சேரில் இலவசமாக 3 யுடியூப் வீடியோக்களுக்கோ அல்லது பேஸ் புக் வீடியோக்களுக்கோ லைக் செய்து சப்ஸ்க்ரைப் செய்தால் ,ஒரு லைக் மற்றும் சப்ஸ்க்ரைப்பிற்கு ரூ, 8 சம்பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த பணம் அந்த செயலியில் பணம் சேமித்து வைக்கப்படும் வாலட்டில் சேரும். அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்கு பல திட்டங்கள் உள்ளன. அப்டேட்,ஏங்கர்,இண்டெர்னட் செலிபிரிட்டி,ஆஸ்கர்,கிங்க் என்ற பெயரில் உள்ள திட்டங்களுக்கு 1000 ரூபாய் முதல் 60 ஆயிரம் வரை பணம் செலுத்தி சேர வேண்டும்.

அப்படி பணம் செலுத்தி திட்டத்தில் சேர்ந்தால் ,ஒவ்வொரு திட்டத்தில் உள்ள வீடியோக்கள் லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்தால் ஒரு வீடியோவுக்கு ரூ8 ரமுதல் 18 ரூபாய் வரை கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். கிங் என்ற திட்டத்தில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு 100 வீடியோக்களை லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்யலாம். ஒவ்வொரு லைக்கிற்கும் 18 ரூபாய் சம்ப்பாதிக்கலாம்.அதன்படி ,ஒரு நாளைக்கு 1800 ரூபாயும்,மாதம் 54 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் எ‘ன்று செயலியில் பட்டியிலிட்டு மக்களின் ஆசையை தூண்டியுள்ளனர். இதை பார்த்து பணத்துக்கு ஆசைப்பட்டு ஏராளமானோர் பல திட்டங்களில் சேர்ந்து பணத்தை செலுத்தியுள்ளனர். எம்.எல்.எம் போன்று செயலியில் வேறு யாரையாவது சேர்த்து குழுக்களை உருவாக்கினால்,அவர்கள் போடும் லைக் மற்றும் சப்ஸ்க்ரைப்ககும் கமிஷன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால், இரண்டு ,மூன்று நாட்களுக்கு பிறகு, இந்த செயலி தானாகவே செயலிழந்து விட்து. இதனால், பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குறைந்த பட்சம் ரூ, 200 சம்பாதித்தால் தான்,செயலியின் வாலட்டில் சேரும் பணத்தை வங்கி கணக்குக்கு மாற்ற முடியும்.ஆனால் அதற்குள்ளாகவே செயலியை செயலிழக்க செய்துவிடுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இந்த செயலிகளில் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர் . இந்த செயலியில் ஏமாந்தவர்கள் செலுத்திய பணம் சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் வங்கி கணக்னில் டெபாஸிட் ஆனதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நூதன மோசடி குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சைபர் க்ரைம் போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்தது போல, இது போன்ற செயலிகளுக்கும் தடை விதிக்க வேண்டுமெனற கோரிக்கை எழுந்துள்ளது.

ST